Feb 19, 2026
சென்னை: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி, 4 படகுடன் 22 மீனவர்களையுமை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்கரை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர்
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. . அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. வழக்கம்போல, எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கிறது.
இந்த விவகாரத்தில், முடிவு எட்டும் வகையில், தமிழ்நாடு அரசு எந்தவொரு தீவிர முயற்சியும் மேற்கொள்ளாமல், பிரதமருக்கு கடிதம் எழுதுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளார். இது மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
தற்போது மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீன்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா – இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, சாதகமான முடிவை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

More Stories
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை? மத்தியஅரசு தீவிர ஆலோசனை…