February 11, 2026

கடந்த 5 ஆண்டுகளில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு, கொத்தடிமை தொழிலாளர் மீட்பு பணியில் சிறப்பாகப் பணிபுரிந்த கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன் குமாருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு, கொத்தடிமை தொழிலாளர் மீட்பு பணியில் சிறப்பாகப் பணிபுரிந்த கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன் குமாருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை: கடந்த 5 ஆண்​டு​களில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்​கப்​பட்டு அவர்​களுக்கு ரூ.2.56 கோடி நிவாரணத்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் சி.​வி.கணேசன் கூறி​னார்.

கொத்தடிமைத் தொழிலா​ளர் முறையை முற்​றி​லும் ஒழிக்​க​வும், தமிழகத்தை கொத்​தடிமை தொழிலா​ளர் இல்​லாத மாநில​மாக உரு​வாக்​க​வும், மாநில அளவி​லான கொத்​தடிமைத் தொழிலா​ளர் முறை ஒழிப்பு தின விழிப்​புணர்​வுக் கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடந்​தது.

இதில், தொழிலா​ளார் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் சி.​வி. கணேசன் கலந்​துகொண்டு கொத்​தடிமை தொழிலா​ளர் முறை ஒழிப்பு தின விழிப்​புணர்வு கையெழுத்து இயக்​கத்தை தொடங்கி வைத்​தார்.

பின்​னர் அமைச்​சர் முன்​னிலை​யில் அரசு அதி​காரி​கள் கொத்​தடிமைத் தொழிலா​ளர் முறை ஒழிப்பு தின உறு​தி​மொழி ஏற்​றனர். தொடர்ந்து அமைச்​சர் கணேசன் பேசி​ய​தாவது: கடந்த 5 ஆண்​டு​களில், 944 கொத்​தடிமை தொழிலாளர்கள் மீட்​கப்​பட்டு அவர்​களுக்கு உடனடி நிவாரணத் தொகை​யாக ரூ.2.56 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், மீட்​கப்​பட்ட கொத்​தடிமைத் தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரத்தை உறு​திப்​படுத்​தும் நோக்​கில், பல்​வேறு துறை​களின் வாயி​லாக நலத்​திட்ட உதவி​களும் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. அவர்​களின் மறு​வாழ்​வுக்​கான நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

2030-ம் ஆண்​டுக்​குள் தமிழகத்தை கொத்​தடிமைத் தொழிலா​ளர் இல்​லாத மாநில​மாக உரு​வாக்க வேண்​டும் என்ற நோக்​கத்தை நிறைவேற்​றும் வகை​யில் அனை​வரும் பாடுபட வேண்​டும். இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார்.

கொத்​தடிமை முறையி​லிருந்து மீட்​கப்​பட்ட தொழிலாளர்கள் தங்​கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்​டனர். கொத்​தடிமைத் தொழிலா​ளர் முறை ஒழிப்​பில் சிறப்​பாக பணி​யாற்​றிய சார்​-ஆட்​சி​யர்​கள் மற்​றும் கோட்​டாட்​சி​யர்​களுக்கு கேடய​மும், பாராட்​டுச் சான்​றிதழ்​களும் வழங்​கப்​பட்​டன.

இந்த கூட்​டத்​தில், தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத் துறை செயலர் வீரராகவ ராவ், தொழிலா​ளர் ஆணை​யர் சி.அ.​ராமன், தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தார இயக்​குநர் செ.ஆனந்த், கூடு​தல் தொழிலா​ளர் ஆணை​யர்​கள், இணை ஆணை​யர்​கள்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Spread the love