
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன்: சீனாவுடன் வர்த்தகம் செய்ய கனடா ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஒப்பந்தப்படி கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால், கனடா பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவன விமானங்களுக்கு,கனடா அங்கீகாரம் வழங்கவில்லை என்றால், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கனடா தயாரிப்பு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும், ‘‘கனடாவில் தயாரிக்கப்படும் அனைத்து விமானங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வேன் . பம்பார்டியர் நிறுவனத்தின் 150 குளோபல் எக்ஸ்பிரஸ் விமானங்கள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு இயங்குகின்றன. இவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’’ என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனம், கனடாவின் பம்பார்டியர் விமான நிறுவனத்துக்கு போட்டியாக உள்ளது. இதனால் கல்ப்ஸ்ட்ரீம் நிறுவன விமானங்களுக்கு கனடா அங்கீகாரம் அளிக்காமல் உள்ளது.

More Stories
ஈரானுக்கு பணம், தங்கம் நன்கொடை வழங்கிய காஷ்மீரிகள்
ஏர் கனடா விமானம் விபத்து: நியூயார்க் விமான நிலையத்தில் 2 விமானிகள் உயிரிழப்பு; 72 பயணிகள் தப்பினர்
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள்