தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியில் கள் இறக்கிய புகாரில் விசாரிக்கச் சென்ற போது போலீசாரை தாக்கியதாக மணிகண்டன் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட விவகாரத்தில், 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டனின் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்றிரவு போராட்டம் நடத்திய நிலையில், எஸ்.ஐ இசக்கி ராஜா உள்பட மூவர் மீது 4 பிரிவுகளின் கீழ் ஆலங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் சேட்.
இவரது மகன் மணிகண்டன் (வயது 32). விவசாயியான இவர் பனையேறும் தொழிலானியாகவும் உள்ளார். ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு மருதம்புத்தூர் பகுதியில் கள் விற்பனை செய்வதாக ரகசிய புகார் வந்தது. அதன்பேரில் எஸ்.ஐ இசக்கி ராஜா மற்றும் 2 போலீசார் மருதம்புத்தூர் காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு பனைமரத்தில் பதநீர் எடுப்பதற்காக பானை வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த போலீசார், மரத்தின் உரிமையாளரான மணிகண்டனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், மணிகண்டன், அவரது தந்தை ஆகியோரை அழைத்து கொண்டு பனைமரம் இருக்கும் பகுதிக்கு சென்றனர். இதை பார்த்த அவர்களின் உறவினர்களும் அங்கு திரண்டு வந்தனர்.
மணிகண்டனை பனை மரத்தின் மீது ஏறி பானையை எடுக்க போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிலரை போலீசார் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்ட மணிகண்டன், எஸ்.ஐ இசக்கி ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது இசக்கி ராஜா அருகில் கிடந்த மரக்கட்டையை கொண்டு அடிக்க ஓங்கியதாகவும், அதை மணிகண்டன் தடுத்தபோது அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் எஸ்.ஐ இசக்கி ராஜா தலையில் கட்டை பலமாக விழுந்து அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே எஸ்.ஐ இசக்கி ராஜா வைத்திருந்து துப்பாக்கியால் மணிகண்டனை நோக்கி சுட்டுள்ளார். இதில் 2 குண்டுகள் அவரது கால்களில் பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து சக போலீசார் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் உறவினர்களுக்கு தெரிய வரவே ஆலங்குளம் – முக்கூடல் சாலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், அகில இந்திய காமராஜர் ஆதித்தனார் கழக பொதுச் செயலாளர் சிங் நாடார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆலங்குளம் டி.எஸ்.பி. கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தமே இல்லாமல் சாதாரண விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய எஸ்.ஐ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More Stories
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்கள் 2ம் கட்டமாக கம்ப்யூட்டர் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.