
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் சமத்துவ இப்தார் நிகழ்ச்சி கூட்டமைப்பின் தலைவர் ஹாமித் இப்ராஹிம், PRL சதக் அப்துல் காதர் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தைப் பறைசாற்றும் வகையிலும், அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் , ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்வர் ராஜா, அப்துல் ரஹ்மான், தமுமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பேசியவர்கள், ரமலான் நோன்பு தரும் ஒற்றுமை, தன்னடக்கம் மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மேலும் மத வேறுபாடுகளை கடந்து சமூக நல்லிணக்கத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நிகழ்ச்சியில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபீதா எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது ,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் வாலியா ராஜாராம் பாண்டியன் , எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் திமுக கட்சியின் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியின்
நிர்வாகிகள் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் நிர்வாகிகள், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் நோன்பு திறப்பு (இப்தார்) கலந்து கொண்டு அனைத்து மதத்தினரும் ஒன்றாக நோன்பு திறந்து சமத்துவத்தை வெளிப்படுத்தினர்.

More Stories
மடப்புரம் அஜித்குமார் மீதான நகை திருட்டு புகார் முடித்து வைப்பு
சோழவந்தானில் கப்பலோட்டிய தமிழன் வ உ சி க்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் வெள்ளாளர் முன்னேற்றக் கழக எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
முதியோர் உதவித்தொகை-3200 ரூபாய் வரவு வைப்பு-முக ஸ்டாலின் அறிவிப்பு!