February 13, 2026

கீழக்கரையில் கெட்டுப்போன உணவுகள் விற்பனை – உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மின்வாரிய நிலையம் அருகே உள்ள அமீர் அரேபியன் மந்தி ரெஸ்டாரண்டில் உணவு அருந்திய நபருக்கு வாந்தியுடன் மயக்கம் ஏற்பட்டு தொடர்ந்து உணவு விஷத்தன்மை ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை சார்பில் கீழக்கரை நகரம் மற்றும் திருப்புல்லாணி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ்கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன நிறப்பவுடர்கள், காலாவதியான மற்றும் பழைய ரொட்டி மாவுகள், செயற்கை நிறங்கள் கலக்கப்பட்ட கோழிக்கறி உள்ளிட்ட கெட்டுப்போன உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த உணவுப் பொருட்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் ஊற்றி அழிக்கப்பட்டன. மேலும், 

ஹோட்டல் நிர்வாகத்திற்கு முறையாகவும் சுத்தமாகவும் உணவு தயாரிக்க வேண்டும் என்றும், மீண்டும் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ந்து ஹோட்டலுக்கு அபராதம் மிதிக்கப்பட்டது.மக்களின் உயிர் மற்றும் உடல்நலத்தை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல், கீழக்கரை நகரில் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களிலும் தொடர்ச்சியான ஆய்வு நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love