February 7, 2026

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து சாப்பிட்டதால் 4 மாதங்களாக கோமாவில் இருந்த ம.பி. சிறுவன் உயிரிழப்பு

பெதுல்: ம.பி.யில் நச்சுச்தன்மை கொண்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால் கோமா நிலைக்குச் சென்ற 4 வயது சிறுவன் நான்கு மாதங்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்​திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்​டத்​தைச் சேர்ந்த ஒரு சிறுவன், கடந்த 4 மாதங்​களுக்​கும் மேலாக கோமா நிலை​யில் நாக்​பூர் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யின் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வந்​தான். இந்த நிலை​யில், கடந்த ஞாயிற்​றுக் ​கிழமை இரவு அந்த சிறு​வன் உயி​ரிழந்​த​தாக மருத்​துவ அதி​காரி​கள் நேற்று முன்​தினம் தெரி​வித்​தனர்.

இது குறித்து பெதுல் மாவட்ட மருத்​துவ அதி​காரி டாக்​டர் மனோஜ் ஹர்​மேட் கூறுகை​யில், “நாக்​பூரில் சிறு​வனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்டு குடும்​பத்​தா​ரிடம் ஒப்படைக்கப்பட்டது. அறிக்கை வந்த பின்​னரே மரணத்​துக்கான காரணம் தெரிய​வரும்” என்​றார்.

கடந்த ஆண்டு செப்​டம்​பர்​-அக்​டோபர் மாதங்​களில், சிறுநீரக செயலிழப்பை ஏற்​படுத்​தும் நச்​சுத்​தன்மை கொண்ட கோல்ட்​ரிஃப் இரு​மல் மருந்தை உட்​கொண்ட 24-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்​தனர். தற்​போது சின்​வாரா எல்​லைப்​பகு​தி​யில் உள்ள திகா​பாரி கிராமத்​தைச் சேர்ந்த ஹர்​ஷும் உயி​ரிழந்​ததைத் தொடர்ந்து உயிரிழப்பு எண்​ணிக்கை 25-ஆக அதி​கரித்​துள்​ளது.

Spread the love