February 19, 2026

சீன பொருட்களை காட்சிக்கு வைத்தது கேலிக்கூத்து: ஏஐ உச்சி மாநாடு பற்றி ராகுல் காந்தி விமர்சனம்

சீன பொருட்களை காட்சிக்கு வைத்தது கேலிக்கூத்து: ஏஐ உச்சி மாநாடு பற்றி ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: டெல்​லி​யில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் ஒரு அரங்​கம் நொய்​டா​வில் உள்ள கல்​கோடி​யாஸ் என்ற தனி​யார் பல்​கலைக்​கழகத்​துக்கு ஒதுக்​கப்​பட்​டிருந்​தது. அதில் இருந்த பல்​கலைக்​கழகத்​தின் பிர​தி​நிதி ஒரு​வர் ‘ஓரி​யான்’ என்ற ரோபோட்​டிக் நாயை காட்​சிக்கு வைத்​திருந்​தார்.

இது தங்​கள் பல்​கலைக்​கழகத்​தின் சீர்​மிகு மையத்​தில் உருவாக்கப்​பட்​டது என்று கூறி, அதன் சிறப்பு அம்​சங்​களை பார்வை​யாளர்​களுக்கு விளக்​கி​னார். ஆனால், உண்​மை​யில் இது சீனா​வின் யுனிட்ரீ என்ற நிறு​வனத்​தின் ஜீஓ2 என்ற ரோபோட்​டிக் நாய். இது ஆன்​லைனில் ரூ.2 லட்​சம் முதல் ரூ.3 லட்​சம் வரை விற்கப்​படு​கிறது.

இதற்கு ‘ஓரி​யான்’ என பெயர் வைத்து கல்​கோடி​யாஸ் பல்கலைக்கழகம் தங்​களின் சொந்த தயாரிப்பு என ஏஐ கண்காட்சி​யில் விளம்​பரப்​படுத்​தி​யுள்​ளது. இதை சீன ஊடகங்​கள் விமர்​சித்​துள்​ளன.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, “ஏஐ உச்சி மாநாடு திட்​ட​மிடப்​ப​டாத விளம்பர கேலிக்​கூத்​து. இங்கு இந்​திய தரவு​கள் விற்​கப்​படு​கின்​றன. சீன தயாரிப்​பு​கள் காட்​சிக்கு வைக்​கப்​பட்​டுள்​ளன. உலக அரங்​கில் இந்​தி​யாவை கேலிக் கூத்​தாக்​கி​விட்​டது மோடி அரசு” என கூறியுள்ளார்.

கல்கோடியாஸ் வெளியேற்றம்: இதுதொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து டெல்லி கண்காட்சி அரங்கை காலி செய்யும்படி கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

Spread the love