February 11, 2026

டிஜிபி அலுவலக பெண் அதிகாரி வீட்டில் ரூ.8 கோடி மதிப்புள்ள நகை திருடிய நபர் கைது

டிஜிபி அலுவலக பெண் அதிகாரி வீட்டில் ரூ.8 கோடி மதிப்புள்ள நகை திருடிய நபர் கைது

சென்னை: தரமணி கானகம், பிள்​ளை​யார் கோயில் தெரு​வில் வசித்து வருபவர் ஜெயப்​பிரதா (45). டிஜிபி அலு​வலக நிர்​வாகப் பிரி​வில் (புல​னாய்வு மற்​றும் உளவுப் பிரி​வான எஸ்​பிசிஐடி) அதி​காரி​யாக உள்​ளார்.

கடந்த 23-ம் தேதி காலை ஐ.டி. ஊழிய​ரான கணவர் வேலைக்​கும், மகன் கல்​லூரிக்​கும் சென்ற நிலை​யில், வீட்​டைப் பூட்​டி​விட்டு வெளியே சென்று மாலை வீடு திரும்​பிய​போது வீட்​டின் பூட்டு உடைக்​கப்​பட்​டிருந்​தது.

உள்ளே சென்று பார்த்​த​போது வீட்​டின் பீரோ​வில் வைத்​திருந்த 69 பவுன் (சு​மார் ரூ.8 கோடி) எடை கொண்ட 12 தங்க செயின்​கள், 3 ஆரம் மற்​றும் 3 ஜோடி கம்​மல்​கள் திருடு​போ​யிருந்​தது தெரிந்​தது.

இது தொடர்​பாக தரமணி காவல் நிலை​யத்​தில் ஜெயப்​பிரதா புகார் அளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி கேமரா காட்​சிகளை ஆய்வு செய்தனர்.

இதில், ஜெயபிரதா வீட்​டில் திருட்​டில் ஈடு​பட்​டது சென்னை ஆர்​.ஏ.புரம், கோவிந்​த​சாமி நகரைச் சேர்ந்த ஆனந்த் (50) என்​பது தெரிந்​தது. இதையடுத்து தலைமறை​வாக இருந்த அவர் நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டார்.

முன்​ன​தாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் ஆனந்த், திரு​வான்​மியூர் பகு​தி​யிலும் பூட்​டி​யிருந்த வீட்​டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்​றும் பணத்தை கொள்​ளை​யடித்து தப்​பியதும் தெரிந்​தது. இவரிட​மிருந்து 54 பவுன் தங்க நகைகள், ரூ.7.5 லட்​சம் மற்றும் செல்போன், பைக் பறிமுதல் செய்யப்பட்டன.

Spread the love