February 19, 2026

டெல்லி: தலைநகர் டெல்லியில, ஆறு நாள்  ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில்  உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

உலகத் தெற்கில் நடத்தப்படும் முதல் உலகளாவிய AI கூட்டமான இந்த உச்சிமாநாடு, முன்னோடியில்லாத வகையில் பங்கேற்றுள்ளது, இதில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், 60 அமைச்சர்கள் மற்றும் 500 உலகளாவிய AI தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஏ.ஐ. உச்சி மாநாட்டின் சிறப்பம்சமாக,  அதாவது  கின்னஸ் உலக சாதனையாக இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்  உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.

இண்டல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து பிப்ரவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய ஏஐ பொறுப்பு உறுதிமொழி இயக்கம் தொடங்கியது. aipledge.indiaai.gov.in என்ற இணையதளம் மூலம் செயற்கை நுண்ணறிவை நெறிமுறையுடனும், பொறுப்புடனும் பயன்படுத்துவது என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

டெல்லி பாரத மண்டபத்தில்  4வது நாளான இன்று பிரதமா் நரேந்திர மோடி   இன்று (பிப்ரவரி)  காலை செய்யறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டின் நிகழ்வுகளை  தொடங்கி வைத்தார். இந்த மாநாடு டெல்லி பாரத மண்டபத்தில் திங்கள்கிழமை (பிப். 16) தொடங்கி 21-ஆம் தேதி வரை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமா் மோடியுடன் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவா்கள், 60 அமைச்சா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட அரச பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.  இவர்களுடன் பிரபல சாப்ட்வேர் நிறுவனங்களான கூகுள், ஓபன்ஏஐ, மைக்ரோசாஃப்ட் என பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனர். மேலும், பல்வேறு  சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள், ஆய்வு அமைப்புகள்  பங்கேற்றுள்ளன.

மாநாட்டின் ஒரு பகுதியாக கடந்த 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஏஐ தொழில்நுட்ப விளக்கக் கண்காட்சியை பிரதமா் மோடி மற்றும் பிற தலைவா்கள் இன்று பாா்வையிட இருப்பதாக அறிவிக்கப்பட்டள்ளது.

 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாடு 2026-இல் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எடுத்துக் கொண்டது கின்னஸ் உலக சாதனையாக அமைந்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில், பங்கேற்கும் பல்வேறு நாட்டுத் தலைவா்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினார் மேலும், நிா்வாகம், உள்கட்டமைப்பு, சா்வதேச ஒத்துழைப்பு என ஏஐ தொழில்நுட்பத்தின் தேசிய மற்றும் உலகளாவிய தேவைகள் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, நேறறு  மாலை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினார். இவா்கள், பிரதமா் மோடியை புதன்கிழமை தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.

ஸ்பெயின் அதிபா் உடனான சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘அதிபா் பெட்ரோ சான்சேஸுடனான சந்திப்பு ஆக்கப்பூா்வமாக இருந்தது. இருவரும் இந்தியா-ஸ்பெயின் நட்புறவை மேலும் ஊக்குவிப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினோம். குறிப்பாக, பாதுகாப்பு, ஆயுத தளவாடங்கள், தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

ஐரோப்பிய யூனியன்-இந்தியா இடையேயான வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், ஸ்பெயின் உடனான வா்த்தக உறவில் சாதகமான தாக்கத்தையும், இரு நாட்டு மக்களுக்கு புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரும்’ என குறிப்பிட்டுள்ளாா்.

ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சான்சேஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஸ்பெயின்-இந்தியா இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் ஆலோசித்தோம். ஏ.ஐ.யின் தாக்கம் குறித்த கருத்தரங்கிற்காக நான் அவரிடம் நன்றி தெரிவித்தேன். மக்களை மையமாக கொண்ட ஏ.ஐ.யை உருவாக்க தொடா்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை நாங்கள் வலியுறுத்தினோம்’ என தெரிவித்துள்ளாா்.

பின்லாந்து பிரதமருடனான சந்திப்பு குறித்து பிரதமா் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவும், பின்லாந்தும் வா்த்தகத்தை இரண்டு மடங்காக உயா்த்த இலக்கு நிா்ணயித்துள்ளன. இது பொருளாதார தொடா்புகளுக்கு வலுவான ஊக்கம் தரும். 6ஜி, புத்தாக்கம், தூய எரிசக்தி, உயிரி எரிபொருள்கள் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசித்தோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்லாந்து பிரதமா் பெட்டேரி ஓா்போ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமா் மோடியுடனான விரிவான ஆலோசனையின்போது, இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையில்லா வா்த்தக ஒப்பந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் ஆதரவு அளித்ததற்காக நான் தெரிவித்தேன். இந்த ஒப்பந்தமானது, இந்தியா-ஐரோப்பிய உறவுகளின் பொற்காலம்’ எனத் தெரிவித்துள்ளாா்.

ஏ.ஐ. கண்காட்சியில் பங்கேற்க தில்லி வந்துள்ள சொ்பிய அதிபா் அலெக்சாண்டா் உசிக்கும் மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது பாதுகாப்பு, உற்பத்தி, உரம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மோடி தெரிவித்துள்ளாா்.

சொ்பிய அதிபா் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா எங்களின் நம்பகமான மற்றும் முக்கியமான கூட்டாளி; இருநாடுகள் இடையே நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்பையும், முதலீட்டுத் திட்டங்களை ஊக்கப்படுத்த விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

டெல்லி  ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பங்கேற்க தில்லி வந்துள்ள கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை, பிரதமா் மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பு குறித்து, பிரதமா் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தில்லி ஏ.ஐ. உச்சிமாநாட்டின் இடையே சுந்தா் பிச்சையை சந்தித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏ.ஐ. துறையில் இந்தியாவின் பணிகள் குறித்தும், இந்தத் துறையில் நமது திறமையான மாணவா்கள், பணியாளா்களுடன் கூகுள் இணைந்து பணிபுரிவது குறித்தும் ஆலோசித்தோம்’ என்று கூறியுள்ளாா்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாடு 2026-இல் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எடுத்துக் கொண்டது கின்னஸ் உலக சாதனையாக அமைந்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இண்டல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து பிப்ரவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய ஏஐ பொறுப்பு உறுதிமொழி இயக்கம் தொடங்கியது. aipledge.indiaai.gov.in என்ற இணையதளம் மூலம் செயற்கை நுண்ணறிவை நெறிமுறையுடனும், பொறுப்புடனும் பயன்படுத்துவது என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சிமாநாட்டையொட்டி நடத்தப்பட்ட இந்த உறுதிமொழியை பிப்ரவரி 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் 2,50,946 பேர் எடுத்துக்கொண்டனர். இதன் மூலம் நம்பகமான மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தியது. உறுதிமொழியை ஏற்றுக்கொண்டவர்கள் டிஜிட்டல் பேட்ஜ் மற்றும் ஏஐ கற்றல் பாதைகளுக்கான அணுகலைப் பெற்றனர்.

பாரத மண்டபத்தில் நடைபெறும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டின்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் ஸ்ரீ அபிஷேக் சிங், கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டாளர் பிரவீன் படேல் உள்ளிட்டோர் இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான மற்றும் நெறிமுறை பயன்பாட்டில் இளைஞர்களை ஈடுபடுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு பாராட்டு தெரிவித்தார். “கல்லூரிகளை அணுகுதல், ஆசிரியர்களுடன் கலந்துரையாடுதலில் ஈடுபடுதல், சமூகத்தின் நன்மைக்காக – நமது வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவை ஒரு கருவியாகப் பயன்படுத்தவும், அது பொறுப்புடன் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் இந்த உறுதிமொழியை எடுக்க மாணவர்களை ஊக்குவிக்கவும் அவரது தொலைநோக்குப் பார்வை எங்களைத் தூண்டியது.

செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். இது உண்மையிலேயே நாட்டிற்கான பெருமையான தருணம். செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தை நோக்கி – நாடு நடைபோட வேண்டிய திசை இது என்றும்,  இது குடிமக்கள் தலைமையிலான டிஜிட்டல் பொறுப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், பொது நம்பிக்கையை மையமாகக் கொண்டு உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சொற்பொழிவை வடிவமைப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வளா்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் தாக்கத்தைக் கண்டறியும் நோக்கில் பிரிட்டனின் ப்ளெட்ச்லி பூங்காவில் 2023-இல் ஏஐ பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு தென்கொரிய தலைநகா் சியோலில் 2024-ஆம் ஆண்டும், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 2025-ஆம் ஆண்டும் ஏஐ மாநாடுகள் நடைபெற்றன.

இதன் தொடா்ச்சியாக 2026 – இல் 35 வயதுக்குள்பட்ட 65 சதவீத இளைஞா்களைக் கொண்ட இந்தியாவில் ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது.

Spread the love