தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்த திருப்புல்லாணி சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், அந்த வழியாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, பெரிய பட்டிணத்தைச் சேர்ந்த செய்யது சாதிக் என்பவர் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.53,000 பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை இடத்து துணை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் காலத்தில் ரூ.50,000-க்கு மேற்பட்ட பணத்தை எடுத்துச் செல்லும் பொதுமக்கள், அதற்கான உரிய ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதிமுறைகளை மீறினால் பணம் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன

More Stories
தமிழகத்தில் உடன்பிறப்பு இருக்கும்வரை.. பாஜகவுக்கு இடமே இல்லை- முதல்வர் ஸ்டாலின் சவால்!
மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள்: இன்று முதல் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றங்கள்!
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ராசிபுரம் நகராட்சி உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.