February 21, 2026

திமுக இளைஞர் அணி புதிய மன்றங்கள்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திமுக இளைஞர் அணி புதிய மன்றங்கள்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ​திமுக இளைஞர் அணியை வலுப்​படுத்​தும் வகை​யில், வள்​ளுவர் கோட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்​வில் 30 புதிய இளைஞர் அணி மன்​றங்​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

திமுகவின் நீண்​ட​காலப் பாரம்​பரிய​மான ‘மன்​றங்​கள்’ அமைக்​கும் முறையை மீண்​டும் முன்​னெடுத்​துள்ள இளைஞர் அணி, முதற்​கட்​ட​மாக சென்னை மேற்கு மாவட்​டத்​துக்கு உட்​பட்ட ஆயிரம் விளக்கு (மேற்​கு) பகு​தி​யில் 30 மன்​றங்​களைத் தொடங்​கி​யுள்​ளது.

இதில் 12 மன்​றங்​களுக்கு நேரடி​யாகச் சென்று கொடியேற்​றிய துணை முதல்​வர், மீத​முள்ள 18 மன்​றங்​களைக் காணொலி வாயி​லாகத் தொடங்கி வைத்​தார். இந்த நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​யதாவது: அண்ணா ராபின்​சன் பூங்​கா​விலும், கருணாநிதி ஜான்சி ராணி பூங்​கா​விலும் அமைப்​பைத் தொடங்​கியதைப் போல, இன்று நாம் வள்​ளுவர் கோட்​டத்​தில் இந்த மன்​றங்​களைத் தொடங்​கி​யுள்​ளோம்.

பரிந்​துரைகள் இன்றி உழைப்​பின் அடிப்​படை​யில் தேர்வு செய்​யப்​பட்ட நீங்​கள், திமுக ராணுவத்​தின் பலம் மிக்க வீரர்​கள். உங்​களின் உழைப்பு 50% மக்​கள் சேவை​யாக​வும், 50% கழகப் பணி​யாக​வும் இருக்க வேண்​டும். ஏழை எளிய மக்​களுக்கு அரசு சான்​றிதழ்​கள், மருத்​துவ உதவி என தேவை​யான உதவி​களை முன்​னின்று செய்ய வேண்​டும்.

சமூக நீதி மற்​றும் திரா​விட இயக்க வரலாற்​றைப் படித்​துத் தெளிவு​பெற வேண்​டும். களப்​பணி மட்​டுமின்​றி, சமூக வலை​தளங்​களி​லும் அரசின் சாதனை​களைத் துடிப்​புடன் கொண்டு சேர்க்க வேண்​டும். சிறப்​பாகப் பணி​யாற்​று​பவர்​களுக்​குக் கட்​சி​யில் உரிய உயர்வு நிச்​ச​யம் கிடைக்​கும். சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் 50 நாட்​களே உள்​ளன.

200 தொகு​தி​களுக்கு மேல் வெற்றி பெற வேண்​டும் என்ற இலக்கை முதல்​வர் ஸ்டா​லின் நிர்​ண​யித்​துள்​ளார். மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் போன்ற சாதனை​களை மக்​களிடம் கொண்டு சேர்த்​து, ஒவ்​வொரு மன்​ற​மும் குறைந்​தது 200 வாக்​கு​களை​யா​வது நமக்கு ஆதர​வாக மாற்ற வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். இந்​நிகழ்​வில் மாவட்​டச் செய​லா​ளர் சிற்​றரசு, எம்​.பி. தயாநிதி மாறன், எம்​எல்ஏ. எழிலன், இளைஞர் அணி மாநில, மாவட்ட நிர்​வாகி​கள் பங்​கேற்​றனர்​.

Spread the love