February 27, 2026

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு.

இந்தியாவிலேயே உயரமான நடுகல்,பெரும் கற்கால சின்னங்களான கல்வட்டங்கள் ,முதுமக்கள் தாழி, பனை ஓடுகள் உள்ளதால் 10 கிலோ மீட்டர் அளவிற்கு ஒரு வருட காலத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற உள்ளதாக இந்திய தொல்லியல் துறை திருச்சி சரக கண்காணிப்பாளர் ஆரவல்லி தலைமையில் ஆய்வு திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில், 3,000 ஆண்டு பழமையான தொல்லியல் எச்சங்கள் இந்தியாவிலேயே உயரமான நடுகல் அவற்றை பாதுகாக்க வேண்டும் என, அங்குள்ள கிராமமக்கள் வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தியும், அந்த இடத்துக்கு அருகே தமிழ்நாடு அரசு மின் பகிர்மான கழகம் சார்பில், துணை மின் நிலையம் அமைக்கும் முயற்சியை எதிர்த்தும், 3 ஆண்டு காலமாக , தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.இங்கு கல்வட்டங்கள் ,முதுமக்கள் தாழி, பானை ஓடுகள் போன்ற வரலாற்றுச் சான்றுகள் கிடைத்து வருவதால் இந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசுஅறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரக கண்காணிப்பாளர் ஆரவல்லி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் குமரிக்கல்பாளையத்தில் அகவாராய்ச்சி பணிகளை இன்்று கிராம மக்கள் ஆதரவுடன் துவங்கினர், ஒரு வருட காலத்திற்கு 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற உள்ளதாகவும், கொடுமணலில் கிடைத்த ஆவணங்களை விட இங்கு கூடுதலான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்,

ரோமானியர்கள் தமிழகத்திற்கு எப்படி வந்தனர், கொங்கு மண்டலத்திற்கு எப்படி வந்தார்கள் என்கிற ஆவணங்கள் கிடைத்தது போன்று இந்த இடம் அதோடு தொடர்புடையதாக கருதுவதாகவும் இங்கு பெெரும் கற்காலத்திற்கும் ,வரலாற்று காலத்திற்கும் தொடர்புடைய வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரக கண்காணிப்பாளர் ஆரவல்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்திய தொல்லியல் துறையினர் இங்கு அகழ்வாராய்ச்சி பணிகளை துவங்கியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ,தங்களது 3 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.திருப்பூர் அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் அகழாராய்ச்சி பணிகளை இன்று துவங்கியுள்ளதால் கிராம மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Spread the love