கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தேவரா’.
தெலுங்கில் உருவான இப்படம், தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியானது. படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், இரண்டு பாகமாக இப்படம் வெளியாகும் என்று இயக்குநர் கொரட்டலா சிவா அறிவித்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இருந்தாலும் ரூ.428 கோடி வசூலித்தது. இந்நிலையில் இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறாததால் இதன் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர் சுதாகர் மிக்கிலினேனியிடம் இதுபற்றி கேட்டபோது, “தேவரா 2 படம் நிறுத்தப்படவில்லை. மே மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 2027-ம் ஆண்டு படம் வெளியாகும். கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும்” என்றார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் நடித்து வருகிறார்.

More Stories
தமிழில் திரையிடப்படும் சத்தா பச்சா!
டிடிஎஃப் வாசனின் ஐபிஎல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
இசையமைப்பாளர் சங்கீத ராஜன் காலமானார்