தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – மநீம இடையே 2ம் கட்ட பேச்சு…
திமுக – மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று(வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நடவடிக்கையில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் மதிமுகவுக்கு 4 இடங்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சிக்கு தலா இரு இடங்களும் கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன.
விசிக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் திமுக குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.Advertise with us
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஆனால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க மநீம கேட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓரிரு நாள்களில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

More Stories
திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்!
ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக் குழுக் கூட்டம்!
234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி!