தில்லியில் நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி…

நாடாளுமன்றம்கோப்புப் படம்
நாடாளுமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், தில்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லி காவல்துறையின் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை 8.30 மற்றும் 9.00 மணியளவில் இரண்டு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதில், ”தில்லி காலிஸ்தானாக மாறும் – பிப். 13, பகல் 1.11 மணிக்கு நாடாளுமன்றத்துக்குள் குண்டுவெடிக்கும்” என்று அப்சல் குரு மற்றும் காலிஸ்தான் தேசிய இராணுவத்தின் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் பெயர்களை குறிப்பிட்டு குண்டுவெடிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தில்லி காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்திலும் காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More Stories
கான்பூர்: தொழிலதிபரின் மகன் ஓட்டிய சொகுசு கார் மோதி விபத்து – 6 பேர் காயம்
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை இன்றும் முடக்கம்!
“லண்டனை விட சிறப்பு… டெல்லி மெட்ரோவில் டிக்கெட் விலை குறைவு” – பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி பாராட்டு