நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு வரும் மார்ச் 11 ம் தேதி திருச்சி மாநாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி வரவேற்பது, அம்மாநாட்டில் பங்கேற்பது குறித்து பேசினார்.
இதனையடுத்து பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் :-
பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போது அரசியல் மாற்றம் ஏற்படும் அந்த வகையில் நாளைய தினம் பிரதமர் வருகையில் அவசர அவரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயந்து போய் ஒ.பி.எஸ் யை சேர்ந்துள்ளார் மேலும் கூட்டணிக்கு தேமுதிகவையும் இணைத்துள்ளார். திமுக சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பொம்மாத்து வேலை என்றும் திமுகவில் ஒரிஜினல் திமுக தலைவர்களை விட கன்வர்ட் திமுக தலைவர்கள் தான் உள்ளனர். அதிமுக – பாஜக கூட்டணியின் பயத்தால் தான் பெரும் விலைகளை கொடுத்து கட்சிகளை ஸ்டாலின் கூட்டணியில் சேர்க்கின்றார்.
கடந்த 1996 ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிக கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தன ஆனால் மக்களிடம் எதிர்ப்பு இருந்ததால் ஜெயலலிதா தோல்வி அடைந்தார். திமுகவிற்கு கடும் எதிர்ப்பு உள்ளதால் தான் திமுகவிற்கும் – விஜய்க்கும் தான் போட்டி என கூறுகின்றார். திமுகவுக்கு எதிராக தமிழகம் உள்ளதால் அதிலிருந்து நாம் மீன் பிடிக்கலாம் என தவெக விஜய் நினைக்கின்றார்.
அதிமுகவில் யாரை சேர்க்க கூடாது, யாரை சேர்க்க வேண்டுமென இ.பி.எஸ் கடுமையாக இருந்தார் தற்போது ஒ.பி.எஸ். துரோகி தான் என தெளிவாகி விட்டது, அதிமுகவை வழி நடத்துவதற்கு இ.பி.எஸ். சரியான தலைவர் என நிரூபித்து உள்ளார். தென்னிந்தியாவில் மிகப்பெரிய நடிகர் சிவாஜி என நினைத்தேன் ஆனால் OPS தான் மிகப்பெரிய நடிகர் என கடும் விமர்சனம் செய்தார்.

More Stories
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோக்கு பச்சை கொடி… குஷியில் சென்னை மக்கள்
வடகாடு ஊராட்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி -க்கு பாராட்டு விழா.