March 8, 2026

நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயம் – பேராசிரியர் கூட்டரங்கில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் திரு.சி.மணிமாறன் அவர்களின் தலைமையில் முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மார்ச் 9ம் தேதி திருச்சியில் நடைபெறும் “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு குறித்து ஆலோசனை வழங்கி மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் பேசினார்.

நிகழ்வில் மாநகராட்சி மேயர் திரு.து.கலாநிதி,ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட,மாநில நிர்வாகிகள்,பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், நகர்மன்ற,பேரூர் மன்ற தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Spread the love