பாதிக்கப்பட்ட விவசாயி தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை ….
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த மங்களபுரம் ஊராட்சி காவல் நிலையம் அருகே வசிப்பவர் இந்துமதி. இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலையில் தனது வீட்டின் அருகே உள்ள பட்டியில் தன்னுடைய ஆடுகளை கட்டி வைத்துள்ளார்.
இந்நிலையில் கட்டி வைத்திருந்த ஆடுகளை இரவு நேரங்களில் அப்பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 7 ஆடுகள் பலியானது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில் …
எங்கள் பகுதியில் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகரித்துள்ள நிலையில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கட்டப்பட்டிருந்த 7 ஆடுகளின் கழுத்தை கடித்து குதறி கொன்றுள்ளது.இதனால் தங்களுடைய குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது பயமாக உள்ளது.ஏற்கனவே இது போன்று எங்கள் பகுதியில் இரண்டு மூன்று முறை ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்றுள்ளது.
இது சம்பந்தமாக பலமுறை பஞ்சாயத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் நாய்களுக்கு. கருத்தடை செய்து நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

More Stories
பெரம்பலூர், மார்ச்.15-
தேனி மாவட்டத்தில்
பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட இளைஞரணி சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜே.பி.சரவணன் தலைமை வகித்தார். இதில் சரவண பொய்கை கந்த விலாஸ் என் பாஸ்கரன், கண்பத் கிரேண்ட் ஹோட்டல் அதிபர் என்.ஹரிஹரமுத்து, வள்ளுவர் தியேட்டர் அதிபர் செந்தில்குமார், இளைஞர் அணி நிவாஸ்தீன், தவ்பிக் அஹமது ஆகியோர் பங்கேற்றனர்