March 25, 2026

பழனியில் பங்குனி உத்திரம் திருவிழா

 நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

 பழனி மார்ச் 25 

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா நாளை மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனியில் புகழ்பெற்றது பங்குனி உத்திரம் திருவிழாவாகும். இத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் சிறு சிறு குடங்களில் நீரை சேகரித்து, பின்பு அதை தீர்த்த காவடியாக மேளதாளம் முழங்க, பழனிக்கு எடுத்து வருவார்கள். பின்பு தீர்த்தக் காவடி நீரை  பழனி முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள். நாளை மார்ச் 26 ஆம் தேதி வியாழக்கிழமை  பழனி திருஆவினன்குடி முருகன் கோயிலில் காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள், ரிஷப லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. வரும் 31 ஆம் தேதி முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை, பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேசன், உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Spread the love