
சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் ரங்கசாமி. | படம்: எம்.சாம்ராஜ் |
புதுச்சேரி: நிதி செலவினங்களை கருத்தில் கொண்டு, புதுச்சேரி சட்டப் பேரவையில் ரூ. 5 ஆயிரத்து 396 கோடிக்கு ஐந்து மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
புதுவை சட்டப்பேரவைக் கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற உள்ளதால் வரும் நிதி ஆண்டான 2026-27-க்கு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக அரசின் செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்காக புதுவை சட்டப்பேரவை நேற்று கூடியது. நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரத்து 396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பேரவைத் தலைவர் குரல் வாக்கெடுப்பு மூலம் இடைக்கால பட்ஜெட்டுக்கு சபையின் ஒப்புதலைப் பெற்றார். மேலும், புதுவை சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செலவு அறிக்கையை முதல்வர், அமைச்சர்கள் துணை கொடையாக கோரினர்.
இதில் ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளுக்கும் சேர்த்து ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்களுக்கு சபையின் ஒப்புதல் பெறப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் புதிய அரசு அமையும். புதிய அரசு 2026-27-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

More Stories
பெங்களூரில் கொடூர விபத்து! வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் 7 பேர் பலி
“புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க தயார்” – பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
சென்னை ஆராய்ச்சி மையத்தை ரூ.196 கோடியில் விரிவாக்கம் செய்கிறது மஹிந்திரா நிறுவனம்