மும்பை: பும்ரா வீசிய முதல் பந்தில் சிக்சர் அடித்த பின், வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினேன் என்பதை ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். பும்ரா மிகப்பெரிய ஜாம்பவான் என்று கூறிய ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி அவரின் சிறந்த ஷாட்களை விளையாட வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 11 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
அடிச்சதே அண்ணனை தான்யா.. பும்ரா வீசிய முதல் பந்து.. தூக்கி சிக்சர் அடித்த வைபவ் சூர்யவன்ஷி!” சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 77 ரன்களை விளாசினார். அதேபோல் 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 5 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 39 ரன்கள் எடுத்து அசரடித்தார். அதிலும் பும்ரா வீசிய முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிக்சர் அடித்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அந்த ஓவரிலேயே 2வது சிக்சரையும் விளாசி தள்ளினார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்தப் போட்டிக்கு பின் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பும்ரா பந்தில் சிக்சர் விளாசிய பின் சூர்யவன்ஷி உடன் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது தொடர்பாக ஜெய்ஸ்வால் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் ஜெய்ஸ்வால் பேசுகையில், வைபவ் சூர்யவன்ஷி உடனான பார்ட்னர்ஷிப் உற்சாகமாக இருக்கிறது. நாங்கள் இருவருமே எங்களின் ஷாட்களை சுதந்திரமாக விளையாடுகிறோம். நாங்கள் இருவரும் இணைந்து விளையாடும் போது பாசிட்டிவ் மெசேஜ்களை பரிமாறிக் கொள்கிறோம். அந்த சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசனை செய்கிறோம். Recommended For You “ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டாரா? மும்பை அணி கொடுத்த அப்டேட்! ” Powered By எங்களின் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை பேசுகிறோம். இருவரும் இணைந்து எப்படி அணிக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்பதே எங்களின் பேச்சாக இருக்கிறது. பும்ரா சார் வீசிய முதலெ பந்திலேயே வைபவ் சிக்ஸ் அடித்திருந்தார். அப்போது நான் நேரடியாக சென்று உன்னுடைய ஷாட்களை தைரியமாக விளையாடு என்று கூறினே. பும்ரா சார் மிகப்பெரிய ஜாம்பவான். அவரின் பந்தில் ரன்களை எடுத்தால் மகிழ்ச்சி.. அப்படி இல்லையென்றால் மற்ற பவுலர்களை டார்கெட் செய்து கொள்ளலாம் என்று கூறினேன். சில நேரங்களில் வைபவ் சூர்யவன்ஷியின் ஷாட்கள் எனக்கும் அழுத்தத்தை அதிகம் கொடுக்கிறது. நானும் புதிய ஷாட்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார்.

More Stories
“ஐசிசி தொடர்களில் அடுத்தடுத்து இரண்டு தோல்வி வேதனை அளிக்கிறது” – ரச்சின் ரவீந்திரா வருத்தம்
“தோல்விக்கு நானே காரணம்” – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்பு
‘ஓவர்சீஸ்’ பிளேயர் எனும் விமர்சனம் – விராட் கோலி விளக்கம்!