April 10, 2026

“பும்ராவின் முதல் ஓவரிலேயே சூர்யவன்ஷி விளாசியது எனது அழுத்தத்தைக் குறைத்தது” – யஷஸ்வி ஜெய்ஸ்வால்

குவாஹாட்டி: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் குவாஹாட்​டி​யில் ராஜஸ்​தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணி​கள் மோதின. மழை காரண​மாக 11 ஓவர்​களாக நடத்​தப்​பட்ட இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ராஜஸ்​தான் அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 150 ரன்​கள் குவித்​தது.

15 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி 14 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 39 ரன்​களும், மற்​றொரு தொடக்க வீர​ரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 32 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 77 ரன்​களும் விளாசினர். இந்த ஜோடி 30 பந்​துகளில் 80 ரன்​கள் குவித்து மிரட்​டி​யிருந்​தது. 151 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மும்பை அணி​யால் 11 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 123 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது.

ராஜஸ்​தான் அணிக்கு இது ஹாட்​ரிக் வெற்​றி​யாக அமைந்​தது. அதேவேளை​யில் மும்பை அணி 2-வது தோல்வியை சந்​தித்​தது. இந்த போட்டி தொடங்​கு​வதற்கு முன்​ன​தாக யார்க்​கர் ஹீரோ ஜஸ்​பிரீத் பும்​ரா​வின் பந்​து​வீச்சை வைபவ் சூர்​ய​வன்ஷி எப்​படி? எதிர்​கொள்​வார் என்​பது போன்ற கேள்வி​கள் எழுந்​திருந்​தன. ஆனால் பும்ரா 131 கி.மீ. வேகத்​தில் மிடில் மற்​றும் லெக் திசை​யில் வீசிய முதல் பந்​தையே

வைபவ் சூர்​ய​வன்ஷி மிட் ஆன் திசை​யில் சிக்​ஸருக்கு விளாசி அசத்​தி​னார். தொடர்ந்து பும்ரா வீசிய அதே ஓவரின் 4-வது பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார் சூர்​ய​வன்​ஷி. அவரது அச்​சம் இல்​லாத மட்​டைவீச்சு ஆட்​டத்​தின் போக்கை மாற்​றியது. போட்டி முடிவடைந்​ததும் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் கூறிய​தாவது: பும்ரா வீசிய முதல் பந்​திலேயே சூர்​ய​வன்ஷி சிக்​ஸர் அடித்​தார். அப்​போது நான் அவரிடம் சென்று தொடர்ந்து உனது இயல்​பான ஆட்​டத்தை விளை​யாடு என்று கூறினேன்.

பும்ரா ஒரு ஜாம்​ப​வான். அவருக்கு எதி​ராக சூர்​ய​வன்ஷி ரன்​களைக் குவிப்​பது ஆச்​சரிய​மாக இருக்​கிறது. இது மற்ற பந்​து​வீச்​சாளர்​களுக்கு எதி​ராக​வும் நம்​மால் ரன்​கள் சேர்க்க முடி​யும் என்ற உணர்வை எங்​களுக்கு கொடுத்​தது. சூர்​ய​வன்ஷி தனது இயல்​பான ஆட்​டத்தை விளை​யாடியது அவருக்கு மிக​வும் நன்​றாக அமைந்​தது.

அது என் மீதான அழுத்​தத்​தைக் குறைத்​தது, அதன் பிறகு என்​னால் மற்​றொரு பந்​து​வீச்​சாளரைத் தேர்வு செய்து அவருக்கு எதி​ராக அதிரடி​யாக விளை​யாட முடிந்​தது. இது ஒரு நல்ல பார்ட்​னர்​ஷிப்​பாக அமைந்​தது, நாங்​கள் இதை ரசித்து விளை​யாடினோம். இவ்​வாறு ஜெய்​ஸ்​வால் கூறினார்​.

Spread the love