மத்திய கிழக்கு நாடுகளில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து..
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் (கோப்புப் படம்)– AP Photo
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால் அங்குள்ள நாடுகளில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த சனிக்கிழமை (பிப். 28) அன்று கொல்லப்பட்டார்.
இதையடுத்து, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஈரான் அரசு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருவதால், அந்நாடுகளில் மார்ச் 5 அன்று நடைபெற வேண்டிய சிபிஎஸ்இ-யின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், மார்ச் 5 அன்று அங்குள்ள நிலைமையை மதிப்பாய்வு செய்தபின்னர் அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியாகும் என்றும் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.Advertise with us
ஏற்கெனவே, ஈரானின் தலைவர் கமேனி கொல்லப்பட்டது கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் மார்ச் 2 அன்று நடைபெற வேண்டிய சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More Stories
லெபனானில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்ற இஸ்ரேல் படைகளுக்கு உத்தரவு!
அமெரிக்காவிடம் அதிகளவு ஆயுதங்கள் உள்ளன; எப்போதும் போரிட முடியும்! டிரம்ப் மிரட்டல்!!
பாக். ராணுவ நிலைகள் மீது ஆப்கன் அதிதீவிர தாக்குதல்