மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்திருப்பது பற்றி…

மெட்ரோ ரயில்பிரதிப் படம்
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.
அப்போது மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
”மூன்று வழித்தடங்களில் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தொலைவுக்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டத்துக்கான முதல் பகுதியை இயக்குவதற்கான ஒழுங்குமுறை அனுமதி ரயில்வே ஆணையத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ வழித்தடம் வடபழனி மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளன. 11 நிலையங்களுடன் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
கோவை மற்றும் மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் கோரப்பட்டபோது, அதற்கான ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. 20 லட்சத்துக்கும் குறைவான மக்களே இருக்கிறார்கள் என்பதால் ஒப்புதல் அளிக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரங்களுக்கு இணையான நாட்டின் பிற பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை போலவே, மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

More Stories
இராசிபுரம்:ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்த மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார். .
மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்ற ரூ. 229 கோடி ஒப்புதல்!