February 19, 2026

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை!

Gold price

தங்கம் விலை

சென்னை: இந்த வாரத்தில் செவ்வாய், புதன் என இரண்டு நாட்கள் தங்கம், வெள்ளி விலை குறைந்த நிலையில் இன்று ஏறுமுகம் காட்டியுள்ளது. சென்னையில் இன்று (பிப்.19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,500-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனையாகிறது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (பிப்.19) காலை சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,500-க்கு விற்​பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.2160 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,16,000-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,70,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது.

Spread the love