February 19, 2026

மும்பை பெண் மருத்துவருக்கு நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சாதனை

மும்பை பெண் மருத்துவருக்கு நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சாதனை

சென்னை: ​மும்பை பெண் மருத்​து​வருக்கு நவீன சிகிச்சை மூலம் மீண்​டும் பார்​வைத்​திறனை வழங்கி டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை சாதனை படைத்​துள்ளது.

மும்​பையை சேர்ந்த 44 வயதான மகப்​பேறியல் பெண் மருத்​து​வர் ஒரு​வருக்​கு, கடுமை​யான கண் அழுத்த நோய் (குளுக்​கோ​மா) மற்​றும் தவறாகப் பொருத்​தப்​பட்ட செயற்கை லென்ஸ் காரண​மாக 2 கண்​களி​லும் பார்வை முற்​றி​லும் பறி​போ​யிருந்​தது.

ஏற்​கெனவே பல இடங்​களில் அறுவை சிகிச்​சைகள் செய்​தும் பலன் கிடைக்​காத நிலை​யில், அந்த மருத்​து​வர் சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனையை அணுகினார்.

இங்கு அவரை பரிசோதனை செய்த மருத்​து​வர்​கள், ஒரே அமர்​வில் 3 முக்​கிய சிகிச்​சைகளை ஒருங்​கிணைத்து மேற்​கொண்​டனர். குறிப்​பாக ‘5F-ISHF’ எனும் நவீன உத்​தி​யின் மூலம் புதிய லென்ஸ் பொருத்​தப்​பட்​டது. இதனுடன் கண்களின் முழு​மை​யான குறை​பாடு​களை சரிசெய்​வதற்​காக, கரு​விழி மாற்று சிகிச்சை மற்​றும் கண் பாவை சீரமைப்பு ஆகிய​வை​யும் ஒரே சிகிச்சை அமர்​வில் செய்​யப்​பட்​டன.

அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே, அந்​தப் பெண் மருத்​து​வருக்கு இடது கண்​ணில் 6/24 என்ற அளவில் கணிச​மான பார்​வைத்​திறன் திரும்​பக் கிடைத்​துள்​ளது.

இதுகுறித்து டாக்​டர் அகர்​வால்ஸ் குழு​மத்​தின் முதன்மை மருத்​துவ அதி​காரி டாக்​டர் அஸ்​வின் அகர்​வால் கூறும்போது, “பல ஆண்​டு​களாகப் பார்​வை​யின்றி அவதிப்​பட்ட ஒரு சக மருத்​துவ நிபுணர், மீண்​டும் தனது மருத்​து​வப் பணிக்​குத் திரும்​புவதைப் பார்ப்​பது எங்​களுக்​குப் பெரு​மிதம் அளிக்​கிறது.

கண்​ணின் சிதைந்த அமைப்​பை சீரமைத்​து, புதிய லென்ஸை பாது​காப்​பாகப் பொருத்​தி​யது ஒரு மிகப்​பெரிய சவாலாகும்” என்​றார். தொடர்ந்து ‘5F-ISHF’ என்ற நவீன தொழில்​நுட்​பத்தை உரு​வாக்​கிய​வரும், அறுவை சிகிச்​சையை முன்​னின்று நடத்​தி​ய​வரு​மான டிஏஆர்​சிஎஃப் இயக்​குநர் டாக்​டர் சூசன் ஜேக்​கப் கூறும்போது, “நோ​யாளிக்கு 2010-ம் ஆண்​டிலிருந்தே குளுக்​கோமா பிரச்​சினை இருந்​தது.

கண்​புரைக்​கான அறுவை சிகிச்சை மற்​றும் தாங்​கு​திசு நீக்​கல் சிகிச்சை போன்​றவற்றை பிற மருத்​து​வ​மனை​களில் செய்​து​கொண்ட போதும், அவரது பார்​வைத்​திறன் குறைந்து கொண்டே போனது. ஏறக்​குறைய அவரது பார்​வைத்திறன் முழு​மை​யாக இழந்திருந்தது.

அவருக்கு முன்பு பொருத்​தப்​பட்​டிருந்த லென்ஸ் நகர்ந்து கண்​ணின் உட்​பகு​தியை அழுத்​தி​யதே பார்வை இழப்​புக்கு முக்​கிய காரணம். நாங்​கள் அந்த பழைய லென்ஸை அகற்​றி, ‘5F-ISHF’ முறை​யில் புதிய லென்ஸை பாது​காப்​பாகப் பொருத்தி பார்​வையை மீட்​டோம்” என்​றார்.

இந்​தச் செய்​தி​யாளர் சந்​திப்​பில், டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ சேவை​கள் மண்​டலத் தலை​வர் டாக்​டர் சவுந்​தரி, விட்​ரியோ ரெடினா துறை​யின் கிளினிக்​கல் லீட் மற்​றும் தலை​வரு​மான மனோஜ் காத்ரி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

Spread the love