முதல்வர் மம்தாவுடன் அபிஷேக் பானர்ஜி
புதுடெல்லி: மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸின் (டிஎம்சி) இளைஞர்
பிரிவு தலைவராக இருப்பவர் அபிஷேக் பானர்ஜி. மக்களவை எம்.பி.யான இவரை
முதல்வர் மம்தா தனது வாரிசாக முன்னிறுத்தி வருகிறார். இதனால் கட்சியில்
மம்தாவுக்கு அடுத்த நிலை தலைவராக அபிஷேக் முன்னிறுத்தப்படுகிறார்.
இந்நிலையில் 2026 தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மம்தாவுக்கு இணையான
தலைவராக அபிஷேக் உருவெடுத்துள்ளார். இருவரின் ஒருங்கிணைந்த தலைமை,
மேற்கு வங்க அரசியலில் ஒரு தனித்துவமான அரசியல் நிலையை உருவாக்கியுள்ளது.
முதல்வர் மம்தாவின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக அபிஷேக் மாறி வருகிறார்.
இது, மாநில தேர்தல் அரசியலில் மம்தாவின் மருமகன் அபிஷேக்கின் ஒரு
குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

More Stories
2026 தமிழக சட்டமன்ற தேர்தல்: சென்னையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மையக்குழு கூட்டம்!
மக்களவைத் தொகுதிகளை 816 ஆக அதிகரிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஏப்.16-ல்தொடக்கம்
“முதல்வராக தொடர்வேன்” – சித்தராமையா திட்டவட்டம்