February 7, 2026

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை

முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்​லாம் கடாபி

முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்​லாம் கடாபி

திரிபோலி: வட ஆப்​பிரிக்க நாடான லிபி​யா​வில் கடந்த 1969-ம் ஆண்டு முதல் மொம்​மர் கடாபி ஆட்சி செய்து வந்​தார். பல்​வேறு அடக்​கு​முறை​களால் பாதிக்​கப்​பட்ட மக்​கள் கடந்த 2011-ம் ஆண்டு உள்​நாட்​டுக் கலவரத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது சர்​வா​தி​கார அதிபர் கடாபி பட்​டப்​பகலில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

அதன் மூலம் 40 ஆண்​டு​களுக்​குப் பிறகு லிபி​யா​வில் ஆட்சி மாற்றம் ஏற்​பட்​டது. கடாபி​யின் 2-வது மகன் சைப் அல் இஸ்​லாம் கடாபி (53). இவர் லிபி​யா​வின் ஜின்​டான் நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்​தார். கடாபிக்கு எதி​ராக மக்கள் கலவரத்​தில் ஈடு​பட்ட போது மனித குலத்​துக்கு எதி​ராக பல்​வேறு கொடுமை​களை செய்​த​தாக சைப் அல் இஸ்​லாம் மீது குற்றச்சாட்டு​கள் எழுந்​தன.

இதையடுத்து இவரை தேடப்​படும் குற்​ற​வாளி​யாக சர்​வ​தேச குற்றவியல் நீதி​மன்​றம் அறி​வித்​தது. இந்​நிலை​யில், கடந்த செவ்வாய்க்​கிழமை வீட்​டின் தோட்​டத்​தில் சைப் அல் இஸ்​லாம் இருந்தபோது, 4 மர்ம நபர்​கள் திடீரென வீட்​டுக்​குள் புகுந்​தனர். வீட்​டில் இருந்த சிசிடிவி கேம​ராக்​கள் அனைத்​தை​யும் செயலிழக்க செய்​தனர்.

பின்​னர் சைப் அல் இஸ்​லாம் மீது சரமாரி​யாகத் துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​விட்டு தப்​பிச் சென்​றனர். இதில் சைப் உயி​ரிழந்​தார். இத்தகவலை சவு​தி​யின் அல் அரேபியா தொலைக்​காட்சி வெளியிட்​டது. அவரை சுட்​டுக் கொன்​றவர்​கள் யார் என்​பதை கண்​டு​பிடிக்க முடிய​வில்லை என்று வழக்​கறிஞர் ஒரு​வர் தெரிவித்தார்.

Spread the love