February 17, 2026

வேளாண், உயர்கல்வித் துறைகள் சார்பில் ரூ.598 கோடி மதிப்பில் 16 உழவர் அங்காடிகள், கல்விசார் கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

வேளாண், உயர்கல்வித் துறைகள் சார்பில் ரூ.598 கோடி மதிப்பில் 16 உழவர் அங்காடிகள், கல்விசார் கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: வேளான் துறை, உயர்​கல்​வித்துறை சார்​பில் ரூ.597.68 கோடி​யில் 16 உழவர் அங்​காடிகள், கல்​வி​சார் கட்​டிடங்​களை திறந்து வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ரூ.555.92 கோடி மதிப்​பிலான கல்விக் கட்​டிடங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

இதுகுறித்​து, தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறி்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: விவ​சா​யிகள் விளைவிக்​கும் வேளாண் பொருட்​களை நகர்ப்​புற நுகர்​வோரிடம் கொண்டு சேர்க்​கும் வகை​யில் வேளாண் துறை சார்​பில் முதற்​கட்​ட​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​திகளில் ரூ.2.06 கோடி செல​வில் அமைக்​கப்​பட்​டுள்ள 16 உழவர் அங்​காடிகளை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

அத்​துடன், ரூ.53.60 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள 6 ஒருங்​கிணைந்த வேளாண்மை விரி​வாக்க மையங்​கள், 6 துணை வேளாண்மை விரி​வாக்க மையங்​கள், 2 விதை சேமிப்பு கிடங்​கு​கள், 4 ஒழுங்​கு​முறை விற்​பனைக் கூடங்​கள், 100 டன் கொள்​ளளவு கொண்ட ஒரு குளிர்​ப​தனக் கிடங்​கு, 2 ஒருங்கிணைந்த விதைச் சான்​றளிப்பு மற்​றும் உயிர்​மச் சான்​றளிப்​புத் துறை வளாகங்​கள், தோட்​டக்​கலைப்பட்​டயப்​படிப்பு மாணவர் விடு​தி,வேளாண்​மைப் பொறி​யியல் துறை விரி​வாக்க மையம் ஆகிய​வற்றை திறந்து வைத்​தார்.

மேலும், 100 மதிப்​புக் கூட்​டும் மையங்​கள் அமைக்​கும் திட்​டத்​தின் முதற்​கட்​ட​மாக 54 தொழில் முனை​வோருக்கு மதிப்​புக்​கூட்​டும் மையங்​கள் அமைக்க ஒப்​பளிப்பு ஆணை​கள் வழங்​கி, வேளாண்​மைப் பொறி​யியல் துறை​யின் இயந்​திர வாடகை சேவை​யினை வலுப்​படுத்த கொள்​முதல் செய்​யப்​பட்ட 672 வேளாண் இயந்​திரங்​கள் மற்​றும் கருவி​களின் சேவை​களை கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

திரு​வாரூர், ராணிப்​பேட்​டை, கள்​ளக்​குறிச்​சி, சென்​னை, தரு​மபுரி, திருச்​சி​ராப்​பள்​ளி, சிவகங்​கை, மதுரை, கோவை, திரு​வண்​ணா​மலை, செங்​கல்​பட்​டு, சேலம், வேலூர் ஆகிய இடங்​களி​லுள்ள கல்​லூரி​களில் வகுப்​பறை, உள்​ளிட்ட கட்​டிடங்​கள் கட்​டப்​பட்​டுள்​ளன.

சென்​னை, கோவை, மதுரை​யில் 5 அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் ரூ.255 கோடி​யில் திறன்​மிகு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அரசு உயர்​கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் பல்​கலைக்​கழகங்​களுக்​காக ரூ.198.84 கோடி செல​வில் கற்​றல் மேலாண்மை அமைப்​புடன் ஒருங்​கிணைந்த நிறுவன வள மேலாண்​மைக்​கான மென்​பொருள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

உயர்​கல்​வித் துறை: ரூ.542.02 கோடி செலவி​லான உயர்​கல்​வித் துறை சார்ந்த 15 கட்​டிடங்​களை திறந்து வைத்​து, ஒருங்​கிணைந்த நிறுவன வள மேலாண்​மைக்​கான மென்​பொருளை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். இதுத​விர, கரூர், ஈரோடு, கள்​ளக்​குறிச்​சி, திண்​டுக்​கல், திரு​வாரூர், பெரம்​பலூர், தஞ்​சாவூர், சிவகங்​கை, கடலூர் மாவட்​டங்​களில் அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களுக்கு ரூ.180.08 கோடி​யில் கட்​டிடங்​கள் கட்​டப்பட உள்​ளன.

மேலும், பல்​வேறு மாவட்​டங்​களில் உள்ள அரசு கல்​லூரி​களில் ரூ.375.84 கோடி​யில் 437 வகுப்​பறை​கள், 19 பல்​நோக்கு அரங்​கு​கள், விடு​தி​கள் மற்​றும் இதர கட்​டிடங்​கள் கட்​டப்பட உள்​ளன. இதன்​படி மொத்​தம் ரூ.555.92 கோடி​யில் கட்​டப்பட உள்ள கட்​டிடங்​களுக்கு முதல்வர் காணொலிக் காட்சி வாயி​லாக அடிக்​கல் நாட்​டி​னார்.

இந்நிகழ்​வில் அமைச்​சர்​கள் எ.வ.வேலு, எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், கோவி.செழியன், டி.ஆர்​.பி.​ராஜா, தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம், துறை​களின் செயலர்​கள் உள்ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

Spread the love