August 18, 2026

‘அசாமில் 2-ம் திருமணம் செய்தால் அரசு ஊழியர்கள் சம்பளம் 20% கட்’

குவாஹாட்டி: அசாமில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில முதல்​வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறும்போது, ‘‘அசாம் அரசில் பணி​யாற்​றும் ஊழியர்​களுக்கு ஓர் எச்​சரிக்​கையை விடுக்​கிறேன்.

அரசு ஊழியர்​கள் யாராவது மனை​வியை சட்​டப்​படி விவாகரத்து செய்​யாமல் மற்​றொரு பெண்​ணுடன் அதி​காரப்​பூர்​வ​மற்ற முறையில் திரு​மணம் செய்​து​கொண்​டால், அவர்​களு​டைய சம்பளத்​தில் இருந்து 20 சதவீதத் தொகை பிடித்தம் செய்​யப்​படும். அந்​தத் தொகை, சம்மந்தப்பட்ட அரசு ஊழியரின் முதல் மனைவியின் வங்​கிக் கணக்​கில் அரசு சார்​பில் செலுத்​தப்​படும்’’ என்றார்.

Spread the love