October 6, 2026

விவசாயிகள் தேசிய தென்னை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தென்னை வளர்ச்சி வாரியம் அறிவிப்பு!

டெல்லி: தேசிய தென்னை விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தென்னை வளர்ச்சி வாரியம் அறிவித்துள்ளது. 62வது சர்வதேச தென்னை வளர்ச்சி மாநாடு நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் நிலையில், அந்த மாநாட்டில் தென்னை விவசாய துறையில் சிறப்பாக பங்களிப்புகளை வழங்கியவர்களை அங்கீகரிக்கும் வகையில், மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த தேசிய தென்னை விவசாயி, சிறந்த ஆராய்ச்சியாளர், சிறந்த தென்னை தொழில் முனைவோர் போன்ற பிரிவுகளின் கீழ் தேசிய தென்னை விருதுகள் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தென்னை வளர்ச்சி வாரியம் அறிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளின் படி தேவையான சான்றுகளுடன் தகுதியுடைய விவசாயிகள் ஆராய்சியாளர்கள், தொழில்முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்கள் ஆன்லைன் இணையவழி மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான வழிகாட்டுதல்கள் தகுதி நிபந்தைகள் மற்றும் விண்ணப்பபடிவங்கள் தென்னைவளர்ச்சி வாரியத்தின் (coconut bord.government.in) என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன, இந்த விருதுகள் தென்னை சாகுபடி, ஆராய்ச்சி, புதுமை, மதிப்புக்கூட்டல், பதப்படுத்துதல் மற்றும் தொழில்முனைவோர் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களை அங்கீகரித்து, ஊக்குவிப்பதற்கும் தென்னை துறையில் முன்னுதாரணமான சாதனைகளை பாராட்டுவதற்கும் வழங்கப்படுகிறது எனவே தகுதி உள்ளவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அக்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தென்னைவளர்ச்சி வாரியம் தெரிவித்துள்ளது.

Spread the love