மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, அக்கட்சியினர் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், வரும் 25-ம் தேதி அச்சிறுப்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது.
இதற்காக, அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இங்கு மேடை அமைப்பதற்காக, தரை சமப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவெக தலைமைக் கழகம் அறிவிப்பின் பேரில் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தவெக சார்பாக மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட எழில் கேத்தரின், இதை நேரில் ஆய்வு செய்தார்.

More Stories
தேசிய பத்திரிகை தினம் – முதல்வர் விஜய், தலைவர்கள் வாழ்த்து
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 853 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.