மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுப்பிரமணியசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார். நவம்பர் 25ம் தேதி தீர்த்த உற்சவத்துடன் தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது
இன்று காலை சுப்பிரமணியசாமி மற்றும் தெய்வானை அம்மன் முன்னிலையில் கோயில் கொடிக்கம்பத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் 7-வது நாளான பாவாடை தரிசனமும் இன்றே அமைந்துள்ளது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமி பட்டாபிஷேகம் நவம்பர் 23-ம் தேதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கார்த்திகை மகா தீபம் நவம்பர் 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஏற்றப்படவுள்ளது. திருக்கார்த்திகை நாளான செவ்வாய்க்கிழமை காலையில் திருத்தேரோட்டமும், மாலையில் மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெறும்.

More Stories
சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா: முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்
திருவண்ணாமலை தீப விழா: தரிசனத்துக்கு பக்தர்கள் வரம்பு!
பெண் அதிகாரிகளின் ஆளுமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம்