April 21, 2026

அன்புமணி கூட்டத்தில் நுழைந்த நாதக வித்யா வீரப்பன்.. போலீஸ் செய்த சம்பவம்- மேச்சேரியில் நடந்தது என்ன?

அன்புமணி பிரச்சார கூட்டத்தில், நுழைந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தபட்டார். மேச்சேரி காவல் நிலையம் அழைத்து சென்றதால் பரபரப்பு. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிமுக, திமுக ஒட்டுக்கு பணம் கொடுத்து வருகிறது.தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மேட்டூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன்

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை செய்தார்.
அப்போது அவ்வழியாக மேட்டூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன், மேட்டூர் செல்வதற்காக வந்தனர்.

  

அதிமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் மேட்டூர் சாலையில் சூழ்ந்து நின்று அன்புமணி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை பார்த்து கொண்டு இருந்தபோது அந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் நுழைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக, அதிமுக மீனவர்களுக்கு Representation கொடுக்கல! ரொம்ப கஷ்டமா இருக்கு!

அன்புமணி பிரச்சார கூட்டத்தில் நுழைய முயன்றதால் பரபரப்பு

அன்புமணியிடம் முறையிட வந்த வித்யா வீரப்பனை, இந்த ட்ராமா தேவையா, ப போமா வேலைய பாத்துட்டு என கூறி காவல் துறை மூலம் அப்புறப்படுத்த கூறினார் அன்புமணி.இதனால் மேச்சேரி காவல் நிலைய போலீசார், வித்யா வீரப்பன் கூட்டத்தில் செல்ல அனுமதி இல்லை என்று தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்தனர்.

அப்போது தனக்கு வாக்கு சேகரிக்க உரிமை இல்லையா என்னை ஏன் தடுக்கிறீர்கள் என கண்ணீர் மல்க வித்யா வீரப்பன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன் செய்தியாளர்களிடம் கூறும் போது, சாதாரண வேட்பாளர் என்னை தினசரி வாக்கு சேகரிக்கு செல்லும் போதெல்லாம் அடிக்கடி எனது வாகனத்தில் வந்து தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்க செல்ல முடியவில்லை.

வித்யா வீரப்பன் பரபரப்பு குற்றச்சாட்டு

இன்று மேச்சேரி பேருந்து நிலையத்தில் பாமக தலைவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக கடந்து சென்ற போது என்னையும் என் தோழர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி, உங்களுக்கு கடந்து செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.ஆனால் திமுக, அதிமுக வினர் தொகுதி மக்களுக்கு ஆயிரம் 2000 ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். இதனை கண்டு கொள்ளாமல் காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் உள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பாக எனது சித்தப்பா சீமான் இதே இடத்தில் பேசினார் அப்போது பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் கூட்டம் நடத்தினோம் அது போல் இப்போதும் நடக்கும் என இந்த வழியாக வந்தேன். அன்புமணி ஐயாவிடம் நீங்களாவது எனக்கு வழி விட சொல்லுங்கள் என முறையிட சென்றேன். அவர் இதை நாடகம் என்று எடுத்துக் கொண்டார் அவர் மீது எங்களுக்கு மரியாதை உள்ளது என நாம் தமிழர் கட்சி வித்யா வீரப்பன் வித்யா வீரப்பன் தெரிவித்தார்.

Spread the love