June 13, 2026

அமைச்சர், பேரவைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் விரைவில் மனு – இந்து முன்னணி மாநில தலைவர் தகவல்

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு

சென்னை: மதக் கலவரத்தை தூண்​டும் வகை​யில் பேசிய அமைச்​சர், சட்​டப்​பேர​வைத் தலை​வர் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி ஆளுநரிடம் மனு அளிக்க இருப்​ப​தாக, இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து, அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஜூன் 9-ம் தேதி சென்​னை​யில் சில கிறிஸ்தவ அமைப்​பு​கள், சமூகநலத் துறை அமைச்​சர் வன்​னியரசு மற்​றும் சட்​டப்​பேரவை தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகரன் ஆகியோ​ருக்​குப் பாராட்டு விழா நடத்​திய காணொலி சமூக வலை​தளங்​களில், ஊடகங்​களில் வெளிவந்​துள்​ளது.

இந்த கூட்​டத்​தில் சட்​டப்​பேரவை உறுப்​பினர் ஜே.சி.டி.பிர​பாகரன் கலந்து கொண்​டது முதல்​வரின் முதல் உரைக்கு பொருத்​தமில்​லாத செயல்.

ஜே.சி.டி.பிர​பாகரன் அவரது கடந்த கால கிறிஸ்தவ ஊழி​யத்​தின் நினை​வில் மதவாதக் கூட்​டத்​தில் கலந்​து​கொண்​டு, அங்கு இந்​திய இறை​யாண்​மைக்கு எதி​ராகப் பேசி​யதும், மதவெறி கலவரத்​தைத் தூண்​டும் வகை​யில் தேச ஒரு​மைப்​பாட்​டுக்கு எதி​ராகப் பேசி​யதும் கண்​டிக்​கத்​தக்​கது.

அதே​போல, அமைச்​சர் வன்​னியரசு, அந்த கூட்​டத்​தில் மத்​திய அரசுக்கு எதி​ராக தேச ஒற்​றுமையை சீர்​குலைக்​கும் வகை​யில் பேசி​யதை இந்து முன்​னணி வன்​மை​யாகக் கண்​டிக்​கிறது.

தமிழக முதல்​வர் வன்​னியர சின் வரம்​பற்ற சட்​ட​விரோதப் பேச்​சுக்​காக அவரைக் கண்​டிக்க வேண்​டும். அமைச்​சர் வன்​னியரசு மீதும், சட்​டப்​பேரவை தலை​வர் மீதும் நடவடிக்கை எடுக்க இந்து முன்​னணி சார்​பில், தமிழ்​நாடு ஆளுநரை சந்​தித்​து மனு கொடுக்​க உள்​ளோம். இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Spread the love