மதுரையில் ஆளுநர் அர்லேகர் நடத்திய ஆய்வுக் கூட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளும் தவெக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உட்பட பலரும் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் நேற்று காலை மதுரை பசுமலை பகுதியில் உள்ள சவுராஷ்டிரா கல்லூரி விழாவில் பங்கேற்றார். அதனையடுத்து மதுரை அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்த ஆளுநர், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன், மதுரை எஸ்.பி.தேவநாதன் ஆகியோரை சந்த்தித்து ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தசூழலில் தான், இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித்லைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, ”மதுரை வைகை ஆற்றை ஆய்வு செய்த ஆளுநர் அர்லேகர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டமும் நடத்தியுள்ளார். தமிழ்நாட்டின் இறையாண்மை, நிர்வாகத்துக்குள் ஆளுநர் தலையிடுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆளுநர் ஆய்வுக்கூட்டங்களை நடத்துவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை அவமதிப்பதாகும், புதிய அரசை அவமதிப்பது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும், பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு இல்லையா என மக்கள் கேள்வி எழுப்பும்படி அவரது செயல்பாடு அமைந்துள்ளது” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

More Stories
தமிழ்நாட்டிற்கு இடைத்தேர்தல் தேதி ஏன் அறிவிக்கப்படவில்லை? பின்னணியில் நடக்கும் அரசியல் நகர்வுகள்- இதுதான் காரணம்
கட்டாய பணி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு அரசு சாரா மருத்துவர்கள் போராட்டம்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம்