சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான ஆண்டு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, துணை மருத்துவ படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
அதன்படி, டிப்ளமா படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும் ஆண்டு கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இளங்கலை பட்டப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More Stories
”அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு கூடாது; கடும் கண்டனம் தெரிவிப்போம்” – அமைச்சர் நிர்மல்குமார்
தமிழ்நாட்டிற்கு இடைத்தேர்தல் தேதி ஏன் அறிவிக்கப்படவில்லை? பின்னணியில் நடக்கும் அரசியல் நகர்வுகள்- இதுதான் காரணம்
கட்டாய பணி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு அரசு சாரா மருத்துவர்கள் போராட்டம்