காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆட்டிசம் குறைபாடுடைய சிறுவன் 16 களிமண் பொம்மைகளை செய்து இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
காஞ்சிபுரம், குமார் தெருவைச் சேர்ந்த கார்த்திக் மகன் ஹித்தேஷ். இவர் 60 சதவீத ஆட்டிசம் குறைபாடுடையவர். புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி மாணவரான இவர், களிமண்ணைப் பயன்படுத்தி பல்வேறு உயிரினங்களின் மாதிரிகளை தத்ரூபமாக உருவாக்கும் திறமை படைத்தவர்.
இவர் திமிங்கிலம், கிளி, வாத்து, எலி, கம்பளிப் புழு, பாம்பு, கொக்கு, ஆமை, நத்தை, ஆக்டோபஸ், பென்குயின், மீன், தவளை மற்றும் பனிமனிதன் உள்ளிட்ட 16 களிமண் பொம்மைகளை 30 நிமிடங்களில் செய்தார். இதனைத் தொடர்ந்து இவர் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இந்தச் சாதனையை நிகழ்த்திய சிறுவன் ஹித்தேஷ், தான் பெற்ற பதக்கம், சான்றிதழை மாவட்ட ஆட்சியர் தி.சினேகாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின்போது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் இரா.மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More Stories
2023-க்கு பிறகு நடந்த அனைத்து தேர்தலையும் ரத்து செய்ய பிரகாஷ் ராஜ் வலியுறுத்தல்
“மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்கிறது தமிழக சட்டம் – ஒழுங்கு!” – மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!