ஆவடி: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல், பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் 7 தீர்மானங்களை நிறைவேற்றினார்.
அதில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும், அரசு தரப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பா.ப.மோகனை அரசு நியமிக்க வேண்டும்.
இந்த வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். என 7 தீர்மானங்களை நிறைவேற்றினார். இது தவிர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக சமூகநீதித்துறை அமைச்சரும், விசிக துணை பொதுச்செயலாளருமான வன்னி அரசு, தவெக சார்பில் மாதவரம் எம்எல்ஏ விஜய்பிரபு, காங்கிரஸ் சார்பில் திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக சார்பில் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி, நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குநர் களஞ்சியம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

More Stories
அதிமுக டூ தவெக: டேமேஜ் ஆகிறதா விஜய் இமேஜ்? எடப்பாடி பழனிசாமியின் சைலண்ட் கேம் பின்னணி
முதல்வர் விஜய்க்கு நெருக்கடி.. கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் -தமிழகத்திற்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல்
ஜிவி பிரகாஷின் ”ஹேப்பி ராஜ்” படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை: ஐகோர்ட்