சென்னை: ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் கடந்த 13-ம் தேதி www.tnayushselection.org என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் தொடங்கியது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் இந்த 4 படிப்புகளுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
அதேபோல், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnayushselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
இதற்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த படிப்புக்கு இதுவரை 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கும் 31-ம் தேதி மாலை 5 மணியுடன் விண்ணப்பம் நிறைவடைகிறது. இந்த படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கிடையாது.

More Stories
பிஎட், எம்எட் மாணவர் சேர்க்கைக்கு விவரம் சமர்ப்பிக்க அவகாசம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கவிதா தகவல்
பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு