
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். பின்னர் சசிகுமார், சூரி நடித்த கருடன், காளி வெங்கட் நடித்த ‘மெட்ராஸ் மேட்னி’, விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ஆகிய படங்களில் நடித்தார்.
இவரும் இசை அமைப்பாளர் சுந்தரமூர்த்தியும் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் பிப்.15-ம் தேதி இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
இதில் அவர்கள் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமணப் புகைப்படங்களை ரோஷினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர்களுக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இசை அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, பொம்மை நாயகி, தண்டட்டி, ஐரா உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

More Stories
32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சத்யஜோதி ஃப்லிம்ஸ் – இளையராஜா கூட்டணி
மீண்டும் தள்ளிப் போகிறது ‘எல்ஐகே’
ஜன நாயகன் எப்போது? தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்த மறுதணிக்கை குழு!