June 13, 2026

இராசிபுரம்:துப்பாக்கி முனையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம்  19 பவுன் தங்க நகைகள் 20 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை…

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

 முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம் .

 ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்மலை கோவில் அருகே உள்ள தோட்டத்து வீட்டில் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் துணிகார கொள்ளையில்  ஈடுபட்ட கொள்ளையர்கள் .

 சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா விடிய விடிய தேடுதல் வேட்டை..

 கொள்ளையர்கள் வீசி சென்ற செல்போன் மற்றும் கால் தடங்கள்  கொண்டு அவ்வழியாக உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய SP உத்தரவு.

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சியில் வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி(58) இடம் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டி பிரோவில் இருந்த தங்க நாணயம், தங்க வளையல், மோதிரங்கள்மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகை மற்றும் ரொக்க பணம் 20,000 ரூபாயை  கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை  தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரம் .

 பட்டணம் பேரூராட்சியில் இருந்து புதூர் மலையாம்பட்டி செல்லும் பாதையில் உள்ள பொன்மலை காலபைரவர் கோயிலின் , கிரிவலப் பாதை அருகே 

 தோட்டத்து வீட்டில் தன் மகள் மற்றும் மருமகளுடன்  வசித்து வருபவர் கலைச்செல்வி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இவருடைய கணவர் சதாசிவம் இறந்து விட்டார் .

 இரண்டு மகள்களையும் உள்ளூரிலேயே திருமணம் செய்து வைத்த கலைச்செல்வி, தனது தோட்டத்து வீட்டின் அருகிலேயே HN பிர்க்ஸ் என்று ஹாலோ பிரிக்ஸ் செங்கல் தயாரிக்கும் கம்பெனியை மருமகன் மூலம் நடத்தி வருகிறார் .

 இவரது தோட்டத்து வீட்டிற்கு செல்ல செங்கல் தயாரிக்கும்  பிரிக்ஸ் கம்பெனியின் கேட்டை திறந்து உள்ளே செல்வதுதான் வழியாக உள்ளது.. 

 இரவு சுமார் 8 மணி அளவில் வீட்டில் தனியாக கலைச்செல்வி மட்டும் TV -வில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது, பின்புற தோட்டத்தின் வழியாக முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர் .

 துப்பாக்கியை காட்டி மிரட்டி , நெத்தி பொட்டில் வைத்து எங்கெங்கு நகைகள் உள்ளது என மிரட்டி தலையில் துப்பாக்கியுடன் பீரோ இருக்கும் அரைக்கு அழைத்துச் சென்று நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு கழுத்தில் அணிந்திருந்த செயினையும் கழட்டித் தர சொல்லிய கொள்ளையர்கள், வீட்டின் வெளியே வந்து ஜன்னல் வழியாக துப்பாக்கியை உள்ளே விட்டு சுட்டுக் கொள்ள முயற்சி செய்ததாகவும் , சுதாரித்துக் கொண்ட கலைச்செல்வி லைட்யை அணைத்ததால், இரண்டு கொள்ளையர்களும், தப்பிச் சென்றதாக கூறினார் .

 மேலும் இவர்கள் பின் வழியாக தோட்டத்தில் இருந்து தான் வந்துள்ளார்கள் என்றும், கால்களில் செம்மண் படிந்திருந்தது என்றும் சாதாரண செருப்பை அணிந்து இருந்தார்கள் என்றும் , வெள்ளைத் துணியால் முகம் முழுவதும் மூடப்பட்டு இருந்ததாகவும், கைகளுக்கு கிளவுஸ் போட்டு இருந்ததாகவும் , அச்சத்துடன் தெரிவித்த கலைச்செல்வி இவர்கள் ஒருவன் உள்ளூர் காரணமாகத்தான் இருக்க முடியும் என காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார் .

 மேலும் தனது செல்போனையும் எடுத்துச் சென்று விட்டதால் யாருக்கும் உடனடியாக தகவல் சொல்ல முடியாமல் தவித்ததாகவும் , லைட்டை அணைத்துவிட்டு வீட்டிற்குள்ளேயே 20 நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு பின்பு இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தனது மகள் வீட்டுக்குச் சென்று நடந்ததை கூறி , ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்தார் .

 வீடு மற்றும் இவர்கள் நடத்தும் கம்பெனியில் இதுவரை சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளியை அடையாளம் காண்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது .

 இந்நிலையில் சம்பவ இடத்திற்கு முன்னதாக வந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார், ராசிபுரம் ஆய்வாளர் நாகலட்சுமி, நாமகிரிப்பேட்டை ஆய்வாளர் சாந்தி கலைச்செல்வி இடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் .மேலும்  20-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் முழுவதும், டார்ச் லைட் அடித்து  தேடுதல் வேட்டையில் இறங்கினர் .

 இதில் கொள்ளையர்கள் வந்த சில கால் தடங்கலும் , கலைச்செல்வி இடம் இருந்து எடுத்துச் சென்ற செல்போனும் கிடந்ததை  காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

 தொடர்ந்து பட்டணம் பேரூராட்சி மற்றும் பொன்மலை கோயிலை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களை தனித்தனி குழு மூலமாக ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து வருகிறது.

 காலை மோப்பநாய் வர வைக்கப்பட்டு தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட மேலும் தீவிர விசாரணை தொடரும் எனவும், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா தெரிவித்தார்.

 இந்த துணிகர கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Spread the love