February 13, 2026

 இராமநாதபுரத்தில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் தமிழ்நாடு பட்ஜெட்டை கண்டித்தும், அதற்கு துணைபோகும் அதிமுகவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக கழக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையேற்றார். இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார். தனது உரையில், ஒன்றிய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டின் வளர்ச்சி, நலத்திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டின் நியாயமான பங்கு மற்றும் உரிமைகளை பாதுகாக்க அனைத்து அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். மேலும் மாநில, நகர மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், கழக முன்னோடிகள், வட்ட கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசின் அநீதிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.

Spread the love