September 11, 2026

ஈரோடு

சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 வது குருபூஜையை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக  ஈரோட்டிலிருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில்  பேரணியாக புறப்பட்டனர். முன்னதாக பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்  மயில்துரையன், தொழிற்சங்க செயலாளர் ஆர் கே எஸ் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் குமரேசன், மாநகர இளைஞரணி செயலாளர் சிவா பாண்டியன், மாவட்ட இணைச்செயலாளர் சீனிவாசன் ஒன்றிய செயலாளர்கள்  சந்திரசேகரன், சிவசங்கரன், மருதமுத்து, குப்புசாமி,முஸ்தபா,பழனிச்சாமி, மோகனசுந்தரம், கோவிந்தன், வீரக்குமார், ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Spread the love