ஈரோடு கிழக்கு மாவட்ட லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், ஈரோடு கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட வளர்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.அருள்குமார் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் லிங்கராஜ், மாநில முதன்மை அமைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட அளவிலான வளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்துதல், கட்சி அமைப்புகளை வலுப்படுத்துதல், நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் வருங்கால அரசியல் பணிகளை திட்டமிட்டு முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும், கட்சியின் வளர்ச்சிக்காக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாநில நிர்வாகிகள் வழிகாட்டுதல்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மேற்கு மற்றும் பவானி மாவட்டச் செயலாளர் வெற்றிநிதி சின்னையன், துணைச் செயலாளர் பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி நிர்வாகி செல்வராசு உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பகுதி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More Stories
10-08-2026
நெருப்பெரிச்சல் மண்டல் சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்,,
பழனியில், 50 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.