September 26, 2026

தமிழ்நாடு முழுவதும் 158 சார்பதிவாளர்கள் ஒரே நாளில் இடமாற்றம்

சென்னை: தமிழகம் முழு​வதும் ஒரேநாளில் 158 சார்​ப​தி​வாளர்​களை இடமாற்​றம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்​தில் புதிய திட்​டங்​களில் வீடு, மனைக்​கான முதல் பத்​திரப்​ப​திவு, சார்​ப​தி​வாளர் அலு​வல​கத்​துக்கு நேரடி வரு​கையற்ற முறை​யில், ஆன்​லைன் மூலம் சம்​பந்​தப்​பட்ட விற்​பனை​யாளர் அலு​வல​கத்​தில் இருந்து பதிவு செய்​யும் முறையை கடந்த ஆக.15-ம் தேதி முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​தார்.

அதைத்​தொடர்ந்​து, இந்த திட்​டத்​தில் பல்​வேறு புதிய நடை​முறை​களும் அவ்​வப்​போது இணைக்​கப்​பட்​டு, அதற்​கான வழி​காட்​டு​தல்​களை பதிவுத்​துறை ஐஜி அருண் சுந்​தர் தயாளன் வெளி​யிட்டு வரு​கிறார்.

அந்த வகை​யில், நேரடி வரு​கை​யில்லா பத்​திரப்​ப​தி​வில், கட்​ட​ணம் செலுத்தி பெறப்​படும் வில்​லங்க சான்​றிதழ் அவசி​யம் என்று கூறப்​பட்​டது.

இந்த நடை​முறை​யில் உள்ள பிரச்​சினை​கள் குறித்து பதிவுத்​துறைக்கு பல்​வேறு புகார்​கள் சென்​றன. இதுதொடர்​பாக பதிவுத்​துறை பல்​வேறு ஆய்​வு​களை நடத்தி புதிய வழி​காட்​டு​தல்​களை வெளி​யிட்​டுள்​ளது.

அதன்​படி, புதிய திட்​டங்​களில் வீடு, மனை ஆகிய​வற்​றின் முதல் விற்​பனைக்​கான பத்​திரங்​கள், அடமான ஆவணம் போன்​றவற்றை பதிவு செய்ய கட்​ட​ணமில்​லாமல் இணை​யதளத்​தில் பெறப்​படும் வில்​லங்க சான்றே போது​மானது. ஆவண ஒப்​படைப்பு அடமான பத்​திரங்​களை, ‘சிட்​டிசன் போர்ட்​டல்’ வாயி​லாக தாக்​கல் செய்​தா​லும் பதிவுக்கு ஏற்​கப்​படும்.

கடன் நிறைவு தொடர்​பான ரசீது ஆவணங்​களை பதிவுசெய்ய வில்​லங்க சான்று பார்க்க அவசி​யமில்​லை. நேரடி வரு​கை​யில்லா பத்​திரப்​ப​திவுக்கு விடு​முறை நாள் கட்​ட​ணம் செலுத்த வேண்​டிய​தில்​லை.

நேரடி வரு​கை​யில்லா பத்​திரப்​ப​தி​வில் ஆவண​தா​ரர் எங்​கிருந்​தும் இணை​யதளம் வாயி​லாக பதிவு செய்ய முடி​யும் என்​றுள்ள நிலை​யில், சிறப்பு பொது அதி​கார ஆவணம் பயன்​படுத்த இயலாது என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பொது​மக்​களுக்கு சிரமமில்​லாத இந்த வரு​கை​யில்லா பத்​திரப்​ப​திவு முறை​யில் கடந்த 40 நாட்​களில் 76 ஆயிரம் பத்​திரங்​கள் பதி​யப்​பட்​டுள்​ள​தாக தக வல் வெளி​யாகி​யுள்​ளது.

இதற்​கிடையே, அக்​.15-ம் தேதி முதல் 4 வகை​யான குடும்ப ஏற்​பாடு ஆவணங்​கள் காகிதமற்ற பதிவு முறை​யில் பதிவு செய்​வது கட்​டாய​மாக்​கப்​பட்டு இணை​ய​வழி​யி்ல் ஆவணங்​கள் அனுப்பி வைக்​கப்பட உள்​ள​தாக​வும் பதிவுத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இந்​தச் சூழலில், நேற்று ஒரே நாளில் தமிழகம் முழு​வதும் 158 சார்​ப​தி​வாளர்​களை இடமாற்​றம் செய்து பதிவுத்​துறை தலை​வர் அருண் சுந்​தர் தயாளன் உத்​தர​விட்​டது, பதிவுத்​துறை வட்​டாரத்​தில்​ பரபரப்​பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

Spread the love