March 11, 2026

எண்ணெய்க் கிணறுகள் பற்றி எரிவதால் டெஹ்ரானை சூழ்ந்த கருமேகங்கள் – மூச்சுவிட முடியாமல் பொதுமக்கள் அவதி

எண்ணெய்க் கிணறுகள் பற்றி எரிவதால் டெஹ்ரானை சூழ்ந்த கருமேகங்கள் - மூச்சுவிட முடியாமல் பொதுமக்கள் அவதி

டெஹ்ரான்: எண்​ணெய்க் கிணறுகள் பற்றி எரிவ​தால் டெஹ்ரானை கரு​மேகங்​கள் சூழ்ந்​துள்​ளன. இதனால் மூச்​சு​விட முடி​யாமல் அவதிப்​படு​வ​தாக பொது​மக்​கள் கண்​ணீர் வடித்து வருகின்​றனர்.

ஈரான், அமெரிக்​கா – இஸ்​ரேல் இடையே போர் தொடங்கி நேற்று 11-வது நாளை எட்​டியது. ஈரானின் எண்​ணெய்க் கிணறுகள் மீது இஸ்​ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வருவதால் அவை பற்றி எரி​கின்​றன. இதன் காரண​மாக டெஹ்ரானிலும், டெஹ்​ரானைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களி​லும் வானில் கரு​மேகங்​கள் சூழ்ந்​துள்​ளன. இதனால் சுற்றுச்​சூழலுக்கு பெரும் கேடு ஏற்​பட்​டுள்​ளது.

பொது​மக்​கள் வசிக்​கும் வீடு​களி​லும் கூட கரும்​புகை சூழ்ந்துள்ளது. பொது​மக்​கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையிலும் கூட புகை மேகங்​கள் சூழ்ந்​துள்​ளன. இதனால் அங்​குள்ள நோயாளி​கள் மூச்​சு​விட முடி​யாமல் திணறி வரு​வ​தாக தெரிய​வந்​துள்​ளது.

இது தொடர்​பாக இந்​தி​யா​வில் வசிக்​கும் அப்​கைன் காகி என்ற ஈரான் நாட்​டைச் சேர்ந்​தவர் கூறிய​தாவது: எனது குடும்​பத்​தார் இப்​போது மத்​திய டெஹ்​ரான் பகு​தி​யில் உள்​ளனர். காலை 10 மணிக்கு கூட அங்கு இரவு நேரத்​தில் இருப்​பது போன்ற நிலை இருக்​கிறது. எண்​ணெய் கிணறுகள் பற்றி எரிவ​தால் எங்​கும் புகைமேகம் சூழ்ந்​துள்​ளது.

வீடு​களில் இருப்​பவர்​களே மூச்சு விடுவதற்கு திணறும்​போது வெளியே வருபவர்​களின் நிலையை சொல்​லித் தெரிய ​வேண்​டிய அவசி​யமில்​லை. இந்த போரால் அங்குள்ள மக்​கள் மிக​வும் அவதிப்​பட்டு வரு​கின்​றனர். எங்களுக்கு உதவி செய்ய யாரு​மில்​லை.

குழந்​தைகள், முதி​யோர், செல்​லப்​பி​ராணி​கள் உட்பட அனை​வருமே சிரமப்​படு​கிறோம். இஸ்​ரேல் படைகள் நடத்​திய தாக்​குதல் மிக​வும் தீவிர​மானவை. இதனால் எண்​ணெய்க் கிணறுகள் மிக​வும் சேதமடைந்து பற்றி எரி​கின்​றன. மருத்​து​வ​மனை, வீடு​களி​லும் புகை மேகங்​கள் சூழ்ந்​துள்​ளன. இவ்​வாறு அவர் கூறி​னார்.

மும்​பை​யில் வசிக்​கும் மற்​றொரு ஈரான் நாட்​டைச் சேர்ந்​தவர் கூறும்​போது, “டெஹ்​ரானில் வசிக்​கும் அனைத்து மக்​களும் முகக்கவசம் அணி​யு​மாறு அரசு தெரி​வித்​துள்​ளது. அங்​குள்ள எனது தந்தை​யிடம் சில விநாடிகள் மட்​டுமே பேச முடிந்​தது.

காற்றில் கடுமை​யான எண்​ணெய் துர்​நாற்​றம் வீசுகிறது. ஆனால் காற்றை விட, நச்​சுத்​தன்மை வாய்ந்த கருப்பு மழைத் துளிகள் தான் அதிக சேதத்தை ஏற்​படுத்​துகின்​றன. மோச​மான நிலையை எங்​கள் குடும்​பத்​தார் அங்​கு அனு ப​வித்​து வரு​கின்​றனர்​” என்​றார்​.

Spread the love