March 13, 2026

எரிபொருள் தட்டுப்பாடு! செல்போன் டவர், இணைய சேவை பாதிக்கும் அபாயம்!

நாடு முழுவதும் தொலைத்தொடர்பு பாதிக்கும் அபாயம் பற்றி…

எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால் செல்போன் வலையமைப்பு, இணைய சேவைகள் பாதிக்கப்படலாம் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்கள் தடைப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கடந்த மூன்று நாள்களாக நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்டவைக்கு வழங்கப்படும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன.

வீட்டு உபயோகப் பயன்பாட்டுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கும் கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.Advertise with us

இதனால், புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை (டவர்) தயாரித்து நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதே நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் படிப்படியாக டவர் தயாரிப்புகள் குறைக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டவர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எரிவாயு தேவை ஏன்?

தொலைத்தொடர்பு கோபுரங்கள் பல உலோக செயலாக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. உலோகத்தை சூடாக்கவும், கோபுரங்களின் பாகங்கள் துரு மற்றும் சேதங்களில் இருந்து பாதுகாக்க பூச்சு பூசுவதற்கு எரிவாயு அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன.Advertise with us

இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கம் எழுதியிருக்கும் கடிதத்தில் டவர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான எல்பிஜி, எல்என்ஜி வகை எரிவாயுகளை சீராக விநியோகிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்வெட்டு ஏற்படும்போது தொலைத்தொடர்பு கோபுரங்கள் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. கோடைக் காலம் நெருங்குவதால் மின்வெட்டு அபாயமும் எழுந்துள்ளது.

இத்தகைய சூழலில் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் செல்போன் நெட்வொர்க், இணைய சேவைகளை சீராக வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.Advertise with us

அதனால், தொலைத்தொடர்பு கோபுரங்களை இயக்குவதற்கு தேவையான டீசலையும் சீராக விநியோகிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Spread the love