July 30, 2026

‘ஏழு கடல் ஏழு மலை’​யில் புதிய உலகம்

நிவின் பாலி, சூரி, அஞ்​சலி நடித்​துள்ள படம், ‘ஏழு கடல் ஏழு மலை’. ராம் இயக்​கி​யுள்ள இந்​தப் படத்​துக்கு யுவன் சங்​கர் ராஜா இசை அமைத்​துள்​ளார்.

வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்​பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்​தப் படம் பல்​வேறு சர்​வ​தேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்​றது. இப்​படத்​தின் டீஸர் வரவேற்பைப் பெற்​றுள்ள நிலை​யில் அக்​.1-ல் படம் வெளி​யாக இருக்​கிறது.

இதுபற்றி படக்​குழு கூறும்​போது, “இதில் நிவின்​பாலி​யின் வித்தியாச​மான தோற்​ற​மும் நடிப்​பும் பேசப்​படும். அவருக்கு ஈடுகொடுக்​கும் வகையில் சூரி​யும் சிறப்பாக நடித்துள்ளார். இயக்குநர் ராம் இப்​படத்​தின் மூலம் ரசிகர்​களை நிச்​சய​மாகப் புது உலகத்​துக்கு அழைத்​துச் செல்​வார். குறிப்​பாகச் சமீப நாட்களாக சீரியஸான கதா​பாத்​திரங்​களில் கதை​நாயக​னாக நடித்து வரும் சூரி​யின் காமெடியை மீண்​டும் இப்​படத்​தில் பார்த்து ரசிக்க முடி​யும்” என்​றது படக்​குழு.

Spread the love